GuruAlagar Samyஇளஞ்செழியன் (ஞானகுரு இளம்வயது திருநாமம்) மதுரையில் 23.05.1968 &ல் பிரம்மஸ்ரீ அழகர்சாமி (லேட்) & மேனகா (லேட்) தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது பெற்றோர்கள் சுவாமி சிவானந்த பரமஹம்சர் (நிறுவனர் : சித்த சமாஜம், வடகரை, கேரளா ) அவர்களின் ஆஸ்ரமத்தில் இருந்து சுவாமிகளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.  இளஞ்செழியன் அவரது பாலபருவத்தில் இருந்து, ஆன்மீகப்பாதையில் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தார்.

தனது 16வயதில் ஒருநாள், மதுரையில் உள்ள மைய நூலகத்திற்குச் சென்ற போது, மாமகரிஷி ஈஸ்வரபட்டர் அருளால் ” சத்தியத்தின் சக்தி நிலை” புத்தகம் கிடைக்கப்பெற்று, ஞான நிலை உணரச் செய்யப்பட்டு ஞானவழியில் நடத்தப்பட்டார். மேலும் இந்நிலையில் மாமகரிஷி  ஈஸ்வரபட்டர் அவரைத் தன் ஆத்ம சீடராக ஏற்றுக் கொண்டு, தனது நோக்கங்களை அவர் மூலம் நிறைவேற்ற, இவரை ஒரு கருவியாக பயன்படுத்தி, இவரை உணரச் செய்தும், வழிநடத்தியும், அவரை இந்தியாவில் உள்ள பல்வேறு சக்தி பீடங்களுக்கும், மற்றும் இமயமலைக்கும் செல்லச் செய்து பல ஞான அனுபூதிகளை பெறச் செய்தார். இவர் தனது மத்திம காலத்தில் பல்வேறு துறைகளில் நிர்வாகம், சட்டம், மனிதவள மேம்பாடு மற்றும் மாற்று மருத்துவம் (ஹோமியோபதி) ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றார்.

அவரது 39வது வயதில் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் அவரை 12.08.2007 அன்று ஈஸ்வராலயம் தொடங்கவும், அதன் உயர்ந்த 14 நோக்கங்களையும் அளித்து உத்தரவிட்டார்.

யோகி இளன் ஆனந்தா அவர்கள் பல்வேறு தலைப்புகளில் தனது ஆன்மீகச் சொற்பொழிவுகளை கிட்டத்தட்ட 320 மணி நேரத்திற்கு மேல் ஆற்றியுள்ளார். அவை அனைத்தும் ஒளிப்பேழையாக (சிடி) பதிவு செய்யப்பட்டுள்ளது.