சத்குரு தேவர் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் ஈஸ்வராலயம் சொசைட்டி ஆப் இந்தியா
- 1சத்குருவே தெய்வம் என்று உலகிற்கு பரப்புதல்.
- 2குரு ஈஸ்வர பட்டர் போதித்த சத்தியத்தின் சக்தி நிலையம் இவ்வுலகில் பெற வேண்டிய மெய்ப்பொருளை உலக மக்களுக்குப் பரப்புதல்.
- 3சத்குருதேவர் சுட்டிக்காட்டியபடி எல்லா மதங்களும் ஒரே பேரின்பப் பெருவெளியை அடைவதற்கான மார்க்கமே என்பதை உலகிற்கு பரப்புதல்.
- 4எல்லா மதங்களில் உள்ள சத்தியத் தன்மைகளின் ஒருங்கிணைந்த சத்தியக் கோட்பாடுகளை உலகிற்கு உணர்த்துதல்.
- 5உடலை விட மனம் மேலானது, மனத்தை விட ஆன்மா மேலானது என உலகிற்கு உணர்த்துதல்.
- 6சத்குரு தேவர் சுட்டிக்காட்டியபடி உடல்கண், மனக்கண், ஞானக்கண், உயிர்க்கண் ஆகிய நான்கு கண்களும் சுவாசக்கண் கொண்டே செயல்படும் உண்மையை உலகிற்கு உணர்த்துதல்.
- 7குருதேவர் உணர்த்திய பேரண்டப் பெருவெளியின் இறை ஞானத்தை இவ்வுலகில் பெறுவதற்கு வழியாக யோக விஞ்ஞான முறைப்படி உணர்வு எண்ண சுவாச தியானப் பயிற்சியை இவ்வுலகிற்கு உணர்த்துதல்.
- 8உலகின் உடல்பிணி, மனப்பிணி, அஞ்ஞான பிணிகளை அகற்றப்படுதல்.
- 9உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளான யோகாசன பயிற்சிகளை மக்களுக்குப் பரப்புதல், உடல் பிணிகளைப் போக்க பக்க விளைவுகள் இல்லாத மாற்று மருத்துவமான எலக்ட்ரோ ஹோமியோபதி, அக்குபஞ்சர், மேக்னட்தெரபி, யோகாதெரபி, பயோ மற்றும் மலர் மருத்துவம் ஆகியவற்றால் நிவாரணம் அளித்தல் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் அளித்தல்.
- 10மனப்பிணியை போக்கும் பயிற்சிக்கான ஆளுமைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, தனி மனித மேம்பாட்டு பயிற்சி மற்றும் இளைய சமுதாயத்திற்கான தனிமனித மேம்பாட்டு ஆளுமைப் பயிற்சிகளை இலவசமாக வழங்குதல்.
- 11சத்குரு தேவர் வழிகாட்டியபடி மூலராமர், ஸ்ரீராகவேந்திரர், ஸ்ரீசீரடி சாய்பாபா மூவருக்கும் ஆசிரமத்தில் கோவில் எழுப்புதல் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீசீரடி சாய்நாதர் உணர்த்திய வாழ்க்கை நெறிமுறைகளையும், தர்ம உபதேசங்களையும் மக்களுக்கு பரப்புதல்.
- 12எல்லா குருமார்களையும், சித்தர்களையும் யோகிகளையும், சத்குருவின் அம்சமாகவே பார்க்கும் உயர்ந்த மனோபாவத்தை உலகத்திற்கு உணர்த்துதல். அனைத்து குருமார்களின் சத்திய வாக்கை உலகிற்கு பரப்புதல்.
- 13சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஜோதிட விஞ்ஞானத்தை உலகிற்குப் பரப்புதல். கோள்களின் புறத்தூண்டுதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முழுவதும் விடுபடுவதற்கான வழியையும் போதித்தல்.
- 14ஆசிரமத்தில் தருமசாலை அமைத்து வருபவர்களுக்கு உணவு அளித்தல்.