நமது ஈஸ்வராலயம் தென்தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுக்காவிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள திரளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அச்சம்பட்டியில் அமைந்துள்ளது.
திரளி கிராமம் முதல் தமிழ்ச் சங்க பெருங்கவிஞர் நக்கீரர் பிறந்த புனிதத் திருத்தலமாகும். நம் ஈஸ்வராலயம் மகா சித்தர்களும் மகா முனிவர்களும் தவம் இருந்து வரும் புனித சதுரகிரி மலைத்தொடர் முடிவில் அமைந்துள்ள பெருமாள் மலைக்கு மிக அருகமையில் அமைந்துள்ளது.
நமது அச்சம்பட்டியானது மிகவும் புனிதத்தன்மையும், இனிமையான இயற்கை சூழ்நிலையும் தன்னகத்தே கொண்ட ஸ்தலம் ஆகும். ஏனென்றால் அங்கு பல்வேறு மகான்களும், முனிவர்களும் அங்கு சஞ்சாரம் செய்து உள்ளனர். நமது ஈஸ்வராலயம் அருகிலேயே சுயம்பு பெருமாள் மற்றும் ஸ்ரீ ஆஞ்சனேயர் கோவில் அமைந்துள்ளது.
நமது ஈஸ்வராலயம் 1 ஏக்கர் அளவிலான நிலமாக 2010 – ம் ஆண்டு வாங்கப்பட்டது. அங்கு 2011 – ம் ஆண்டு முதல் 200க்கு மேற்பட்ட அபூர்வ மூலிகை உள்பட பல்வேறு மரங்களும் மற்றும் செடிகளும் நல்லமுறையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
நமது ஈஸ்வராலயத்தில் ஸ்ரீமூலராமர், ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஆகியோருக்கு கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் நமது ஈஸ்வராலயத்தில் அலுவலகம் மற்றும் நூலகம், அறக்கட்டளை உறுப்பினர்கள் தங்கும் அறை, சேவார்த்தி தங்கும் அறை, அருட்பெருஞ்ஜோதி தியான மண்டபம், கோ சாலை, தரும சாலை மற்றும் நமது ஞானகுரு தங்கும் இடமான “ஆனந்தக்குடில்” ஆகியவை கட்டப்பட இருக்கின்றது. மேலும் நமது ஈஸ்வராலயம் முழுவதும் “சூரிய சக்தி மின்சாரம்” வசதியும் செய்யப்பட உள்ளது.
நமது ஈஸ்வராலயம் 2010ம் ஆண்டு சட்டப்படியாக ஒரு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு எண் : 589/2010.